திருக்காட்டுப்பள்ளி உழவர் சந்தையை மேம்படுத்தும் பொருட்டு திருச்சினம்பூண்டி கிராமத்தில் விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் உதவி தோட்டக்கலை அலுவலர் பாக்கியராஜ் பேசினார். தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி உழவர் சந்தை அலுவலர் சந்திரசேகரன், திருக்காட்டுப்பள்ளி உழவர் சந்தையில் புதிதாக கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் விற்பனை செய்து பயன்பெற கேட்டுக்கொண்டார். முகாமில் 32 விவசாயிகள் கலந்து கொண்டனர்.