பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

வடகாடு பகுதியில் பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2022-09-15 20:06 GMT

வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாத தொடக்கத்தில் மல்லிகை, முல்லை போன்ற பூக்கள் கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டன. தற்போது பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்து தற்போது மல்லிகை கிலோ ரூ.120-க்கும், முல்லை ரூ.150 முதல் ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், கரட்டான் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதிகளில் மலர் சந்தை, குளிர்பதன கிடங்கு மற்றும் நறுமண தொழிற்சாலை அமைத்து கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்