கொள்முதல் செய்யப்படாததால் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை
கொள்முதல் செய்யப்படாததால் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
குன்னம்:
ஆன்லைனில் பதிவு
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரும்பாவூர், பூலாம்பாடி, வி.களத்தூர், இனாம் அகரம், கை.களத்தூர், ஒகளூர், அகரம் சீகூர், எழுமூர் உள்ளிட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் குன்னம் அருகே உள்ள நன்னையில் செயல்பட்ட நெல் கொள்முதல் நிலையம், தற்போது நன்னை கிராமத்தில் போதிய இடவசதி இல்லாததால் பழைய அரசமங்கலத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு கிழுமத்தூர், கிழுமத்தூர் குடிகாடு, அகரம், கத்தாழைமேடு, சாத்தநத்தம், பழைய அரசமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது விவசாயிகள் அந்த பகுதிக்கு உட்பட்ட நெல் கொள்முதல் நிலைய இணையம்(ஆன்லைன்) வாயிலாக பதிவு செய்யப்பட்டு, அதில் தெரிவிக்கப்படும் தேதியில் விவசாயிகள் நெல்மணிகளை எடுத்துச்சென்று கொள்முதல் நிலையத்தில் ஒப்படைப்பது வழக்கம்.
15 ஆயிரம் நெல்மூட்டைகள்
ஆனால் இந்த ஆண்டு நன்னை பகுதிக்கு உட்பட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த மே மாதம் அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனை செய்வதற்காக, நுகர்பொருள் விற்பனை மையத்தில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ளனர். ஆனால் நெல்மணிகளை பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்ட தேதியை கடந்தும் நெல்மணிகள் பெறப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக கிடப்பில் உள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து சுமார் 15 ஆயிரத்திற்கும் ேமற்பட்ட நெல் மூட்டைகள் பெறப்படாமல் தேக்கமடைந்துள்ளன.
மே மாதம் பதிவு செய்த நெல்மணிகளை தற்ேபாது வரை பெற்றுக்கொள்ளவில்லை. விவசாயிகள் வயலில் விளைவித்த நெல்மணிகளை மண் சாலைகள், களத்துமேடு, குப்பைமேடு, வீட்டு திண்ணை போன்ற பகுதிகளில் அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் மழை மற்றும் வெயில் காரணமாக நெல்மணிகள் பாதிப்படைய தொடங்கி உள்ளது. விவசாயிகள் அவற்றை தொடர்ந்து பாதுகாப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நஷ்டம்
இதனால் பல விவசாயிகள் விளைவித்த ெநல்மணிகளை விற்பனை செய்ய முடியாததால் 20 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், நெல்மணிகளை உரிய காலத்தில் கொள்முதல் செய்து ேமலும் நஷ்டம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.