கண்மாய் நீரை திறந்ததால் விவசாயிகள் கவலை
கண்மாய் நீரை திறந்ததால் விவசாயிகள் கவலை உள்ளனர்.
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ளது குமாரக்குறிச்சி, பெருமச்சேரிகாந்தி நகர், சுந்தனேந்தல் ஆழி மதுரை, நகரகுடி அதிகரை, நெடுங்குளம் ஆகிய கிராமங்கள். இந்த கிராமங்களை சேர்ந்த நீர்ப்பாசன விவசாயிகளை பாதிக்கும் வகையில் எமனேசுவரம் கண்மாயில் இருந்த தண்ணீரை திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிளகாய் மற்றும் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கண்மாயில் மராமத்து பணி செய்வதற்காக தண்ணீரை திறந்துவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது ெதாடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.