விவசாயிகள் நேரடி பலன் பரிமாற்ற முறையை வங்கி கணக்கிற்கு செயல்படுத்திட வேண்டுகோள்

விவசாயிகள் நேரடி பலன் பரிமாற்ற முறையை வங்கி கணக்கிற்கு செயல்படுத்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-21 18:59 GMT

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.6 ஆயிரம் உதவித்தொகையாக நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டப்பலனை தொடர்ந்து பெற தகுதியான விவசாயிகள் தங்களது வங்கி கணக்கினை நேரடி பலன் பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக மாற்றம் செய்திட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளை அணுகி மேற்கூறிய செயல்முறையை செய்திட அறிவுறுத்தப்படுகிறது. அல்லது இந்தியா போஸ்ட் வங்கிகளை அணுகி அந்த வங்கிகளில் புதிய வங்கி கணக்குகளை உருவாக்கிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் 6 ஆயிரத்து 164 பயனாளிகள் இதுவரை நேரடி பலன் பரிமாற்ற முறைக்கு ஏதுவாக தங்களது வங்கி கணக்கினை மாற்றம் செய்யாமல் உள்ளனர். அவர்கள் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி இத்திட்டப்பலன் தொடர்ந்து பெற்று பயனடையுமாறு என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்