எலியை கடித்தவாறு விவசாயிகள் போராட்டம்

எலியை கடித்தவாறு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-10 20:27 GMT

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14-வது நாளான நேற்று விவசாயிகள் வாயில் எலியை கடித்தவாறு நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், தமிழக விவசாயிகளுக்கு நெல், கரும்புக்கு உகந்த விலை இல்லை. விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால் அரசு இதை கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கில் செயல்படுகிறது. அதேபோன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் இதுவரை கர்நாடகாவில் இருந்து காவிரியில் ேபாதிய தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். வாழ்வாதாரம் இழந்து, அத்தியாவசிய பொருட்களை வாங்கக்கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எனவே விவசாயிகள் உணவுக்கு பதிலாக எலியை உண்டு பிழைக்க வேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. அதை அரசுக்கு சுட்டிக்காட்டும் வயைில் எலியை வாயில் கடித்து போராட்டம் நடத்துகிறோம், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்