கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்புவிவசாயிகள் முற்றுகை போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்புவிவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில் மாவட்ட தலைவர் டி.எஸ். நடராஜன், அவை தலைவர் வெங்கடசாமி மற்றும் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி வட்டத்திலும், சுற்று வட்டாரத்திலும் உள்ள உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா உரம் வாங்க சென்றால், ஒரு பாட்டில் நானோ யூரியா வாங்க வேண்டும் என கடைக்காரர்கள் நிர்பந்தம் செய்கின்றனர். நானோ யூரியாவால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடையாது. விவசாயிகள் கேட்கும் உரத்தை மட்டும் வழங்க வேண்டும். விவசாயிகளை நிர்பந்தப்படுத்தும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
பின்னர் ேகாரிக்கை மனுவை உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் கொடுத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததன் பேரில் முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.