4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரி 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-04 20:30 GMT

கோத்தகிரி

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 விலை நிர்ணயம் செய்ய கோரியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கோரியும் கடந்த 1-ந் தேதி முதல் நாக்குபெட்டா சீமை படுகர் நலச்சங்கம் சார்பில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொரங்காடு சீமை நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமையில் கோத்தகிரி நட்டக்கல் கோவில் மைதானத்தில் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தின் 4-வது நாளான நேற்று இருப்புக்கல், கேர்பன், தொத்தமொக்கை, காத்துக்குளி, சாமில் திட்டு, புது மந்து, நட்டக்கல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை இருப்புக்கல் ஊர் தலைவர் குமார் தொடங்கி வைத்தார். இட்டக்கல் போஜராஜன், காத்துகுளி ராமா கவுடர், சாமில் திட்டு ஆண்டி கவுடர் மற்றும் செவனா கவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய தேயிலை வாரிய உறுப்பினரும், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ராஜேஷ் சந்தர் கலந்துகொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்