19-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 நிர்ணயம் செய்ய கோரி 19-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-19 21:00 GMT

குன்னூர்

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 விலை நிர்ணயிக்க வேண்டும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாக்குபெட்டா படுகர் நலச்சங்கம் சார்பில், கடந்த 1-ந் தேதி முதல் ஊட்டி, கோத்தகிரி பகுதியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 19-வது நாளாக குன்னூர் அருகே கேத்தொரை கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு 6 ஊர் தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் ஒடையரட்டி, சோகத்தொரை, தேனலை, தொட்டனி, சக்கலட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் மேற்கு நாடு சீமை நலச்சங்கம், நாக்குபெட்டா சங்க நிர்வாகிகள் ராமன், தருமன்னன், கேத்தி 14 ஊர் தலைவர் ரமேஷ், தேனலை ஊர் தலைவர் போஜன், கொதங்கட்டி சங்க செயலாளர் குமார், சோகத்தொரை ஊர் தலைவர் மகாலிங்கம், சக்கலட்டி ஊர் தலைவர் ராஜு, ஒடையரட்டி ஊர் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் அர்ஜுனன், தொட்டணி ஊர் தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.இதேபோல் கோத்தகிரியிலும் போராட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்