விவசாயிகள் மகிழ்ச்சி

அய்யம்பேட்ைட, பாபநாசத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-09-28 20:08 GMT

அய்யம்பேட்ைட, பாபநாசத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். அதேபோல இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் மேட்டூர் அணை நீர்வரத்து குறைவால் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் போதுமான அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர். நேற்று மாலை பலத்த இடி, மின்னலுடன் இந்த பகுதியில் கன மழை பெய்தது. அய்யம்பேட்டை, மாகாளிபுரம், கணபதி அக்ஹகாரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை வளர்ச்சி பருவத்தில் உள்ள குறுவை நெற்பயிர், வாழை, கரும்பு பயிர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதே நேரத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் படுகை பகுதிகளில் நடைபெற்று வரும் செங்கல் சூளை பணிகள் இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம்

பாபநாசம் மற்றும் ராஜகிரி, கபிஸ்தலம், சாலியமங்கலம் அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் இரவு கருமேகங்கள் சூழ்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையினால் சம்பா சாகுபடி தொடங்கிய விவசாயிகள் உழவுப்பணிக்கு தேவையான நீர் கிடைத்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்