விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

காவேரிப்பாக்கத்தில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-15 18:11 GMT

காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கான ஆலோசனை குழு கூட்டம் காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. அட்மா தலைவர் அனிதாகுப்புசாமி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மொபேஷ்முருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் உதவியுடன் செயல்படுத்தப்படுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் விளக்கி கூறினார். தோட்டக்கலை துறையில் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து தோட்டக்கலை உதவி அலுவலர் பாண்டியன் கூறினார். இதனைத் தொடர்ந்து வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை குறித்து குருசர்மா விவசாயிகள் மத்தியில் எடுத்துரைத்தார். இதில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உதயகுமார், கிருஷ்ணராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்