கயத்தாறு பகுதியில் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

கயத்தாறு பகுதியில் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-11-09 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் ஆர். சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கயத்தாறு வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் குறு வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு தொகை செலுத்த வேண்டும். சொந்த நிலங்களிலோ அல்லது குத்தகை நிலங்களிலோ விவசாயம் செய்யும் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். தற்பொழுது ராபி பருவத்தில் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும்.

உளுந்து, பாசி பயிர்களுக்கு நவ.15-ந் தேதியும், மக்காச்சோளம், பருத்தி, பயிர்களுக்கு நவ.30-ந் தேதியும், சோளம், நிலக்கடலை பயிர்களுக்கு நவ.15-ந்தேதியும், கம்பு, சூரியகாந்தி, எள் பயிர்களுக்கு டிச.31-ந் தேதியும் காப்பீடு தொகை ெசலுத்த கடைசி நாளாகும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்