விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.;
முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குளம் கரையங்காடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது41). விவசாயி. இவருக்கு தொடர்ச்சியாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த ஆண்டும் விவசாயத்தில் போதிய லாபம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை எப்படி கட்டுவது? என்று விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி தேவசேனா முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.