விவசாயி தற்கொலை

சாணார்பட்டி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-26 19:45 GMT

சாணார்பட்டி அருகேயுள்ள தவசிமடையை சேர்ந்தவர் செல்லையா (வயது 65). விவசாயி. இவரது மனைவி பாத்திமாமேரி. இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த செல்லையா துக்கம் தாங்காமல் கடந்த 21-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்லையா உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்