விவசாயியை குத்திக்கொன்ற வழக்கு: ஆண்டிப்பட்டி கோர்ட்டில் வாலிபர் சரண்

விவசாயியை குத்திக்ெ்கான்ற வழக்கில் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.

Update: 2022-10-27 18:45 GMT

தென்காசி எல்.ஆர்.சாமி நாயுடுபாளையத்தை சேர்ந்தவர் செந்தில் முருகன் (வயது 41). விவசாயி. இவருக்கும், இவரது உறவினரான வெங்கடேஷ் (33) என்பவருக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 25-ந்தேதி இரவு செந்தில் முருகன், மருந்து வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் மருந்து விற்பனை நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை, வெங்கடேஷ் வழிமறித்து தகராறு செய்தார். ஆத்திரமடைந்த வெங்கடேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக செந்தில் முருகனை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து போன அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உள்ள குற்றவியல் நீதித்துறை கோர்ட்டில் நீதிபதி பிச்சைராஜன் முன்னிலையில் நேற்று சரணடைந்தார். பின்னர் அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்