கத்தியால் குத்தி விவசாயி கொலை

அம்மாப்பேட்டை அருகே கத்தியால் குத்தி விவசாயியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-10 18:45 GMT

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை அருகே கத்தியால் குத்தி விவசாயியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குடும்ப தகராறு

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே கள்ளிமேடு கிராமம் வையாபுரி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 45) விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வீரையன். இவரும் சக்திவேலுவும் அணணன், தம்பிகள்.

வீரையனின் மகன் விஸ்வலிங்கம்(30). இவருக்கும், சித்தப்பா சக்திவேலுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

கத்தியால் குத்திக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த விஸ்வலிங்கம் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேலை குத்த முயன்றார். அதைபார்த்து தடுக்க வந்த சக்திவேலின் மனைவி ராதிகாவிற்கு இடது கையில் கத்திக்குத்து விழுந்தது.

தனது மனைவியை காப்பாற்ற முயன்ற சக்திவேலை, விஸ்வலிங்கம் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது. வயிற்றில் கத்திக்குத்து விழுந்ததால் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாலிபர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கத்திக்குத்தில் காயம் அடைந்த ராதிகாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராதிகா அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.பின்னர் கொலை செய்யப்பட்ட சக்திவேலின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறில் சொந்த சித்தப்பாவை வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்