சுரண்டை:
சுரண்டை அருகே வெள்ளக்கால் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் உச்சிமாகாளி மகன் பேச்சிமுத்து (வயது 55). விவசாயி. இவர் நேற்று மாலை மோட்டார்சைக்கிளில் வெள்ளகால் கிராமத்தில் இருந்து வீரகேரளம்புதூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு ேமாட்டார்சைக்கிள் மோதியதில் பேச்சிமுத்து தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் காயமடைந்த பேச்சிமுத்து சம்பவ இடத்திலே பலியானார். மோதிய மோட்டார்சைக்கிளில் வந்த ராஜபாண்டி கிராமத்தை சேர்ந்த சுரேந்திரன் மகன் சூர்யா (21) படுகாயம் அடைந்தார். அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.