விவசாயி மர்மச்சாவு
கீழையூர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கீழையூர் போலீஸ் சரகம் வெண்மனச்சேரி வடபாதி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52) விவசாயி. இவர் கடந்த 8-ந் தேதி மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றவர், வீட்டுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்றுகாலையில் தையான்தோப்பு அருகில் ஒரு வாய்க்காலில் உடலில் காயங்களும் மர்மமான முறையில் கண்ணன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து கண்ணனின் மகன் மணிகண்டன் தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக கீழையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.