டிராக்டர், தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி பலி
டிராக்டர், தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி பலியானார்.;
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த ஆராகுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49). விவசாயி. இவரது விவசாய நிலம் எறும்பூர் கிராமம் அருகே அண்டவெட்டி கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில் விவசாய நிலத்தை இயற்கை உரமிட்டு மேம்படுத்த மாட்டு சாணம், எருவு ஆகியவற்றை ஆராகுர் கிராமத்திலிருந்து டிராக்டரில் எடுத்துச்சென்று வயலில் கொட்டினார்.
பின்னர் அங்கிருந்து டிராக்டரில் திரும்பிக்கொண்டிருந்தார். வளைவில் டிராக்டர் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வடவணக்கம்பாடி போலீசார் விரைந்து சென்று ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஏழுமலையின் மகன் கார்திகேயன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.