செஞ்சி அருகே டிராக்டர் மோதி விவசாயி பலி
செஞ்சி அருகே டிராக்டர் மோதி விவசாயி பலியானார்.
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகுட்டி மகன் கோடீஸ்வரன் (வயது 50), விவசாயி. இவர் சம்பவத்தன்று சத்தியமங்கலம் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் கோடீஸ்வரன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.