மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.;

Update: 2023-06-16 19:00 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு பரவாய் கிராமத்தில் வேப்பூர் செல்லும் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து வந்தார். அதேநேரத்தில் குன்னம் அருகே உள்ள கல்லம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(38) என்பவர், வேப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பரவாய் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற முருகேசன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சாலையில் விழுந்த முருகேசனுக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முருகேசனின் தம்பி சுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியாயினி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து முருகேசனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த முருகேசனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்