மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலி

ஆம்பூர் அருகே மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-06-06 17:59 GMT

ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த கடாம்பூர் பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 46), விவசாயி. அவர் குட்டகிந்தூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மிட்டாளம் ஊராட்சி பைரபள்ளி பகுதியைச் சேர்ந்த அஜித் (வயது 22) என்பவர் ஒட்டி வந்த மோட்டார்சைக்கிள் திடீரென மூர்த்தி மீது மோதியது. அதில் படுகாயம் அடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். அஜித் ஆம்பூரில் இருந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்து குறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்