லாரி மோதி விவசாயி பலி

லாரி மோதி விவசாயி பலியானார்.

Update: 2023-05-17 18:48 GMT

திருமயம் அருகே பெருந்துறை கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கண். இவரது மகன் ஆறுமுகம் (வயது 55) விவசாயி. இவர் நேற்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெள்ளரிக்காய்களை ஏற்றிக்கொண்டு திருமயம் சென்றுள்ளார். அங்கு வெள்ளரிக்காய்களை கொடுத்துவிட்டு மீண்டும் பெருந்துறைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பொன்னமராவதி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு சாலையில் ஏறியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆறுமுகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்