லாரி மோதி விவசாயி பலி

லாரி மோதி விவசாயி பலியானார்.

Update: 2023-04-28 19:09 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அயினாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 49). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் காரை கிராமத்தில் இருந்து அயனாபுரம் செல்லும்போது இடது புற சாலையில் இருந்து வலது புறம் உள்ள அயனாபுரம் பிரிவில் திடீரென திரும்பினார். அப்போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிளில் எதிர்பாரா விதமாக மோதியது. இதில் தர்மராஜ் தலையில் பலத்த அடிப்பட்டு காயம் ஏற்பட்டது. இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தர்மராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்