அரசு பஸ் மோதி விவசாயி பலி

அரசு பஸ் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-09-14 18:59 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 50), விவசாயி. இவர், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

சோமந்தாங்கல் கூட்ரோடு பகுதியில் சென்ற போது அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்