சின்னசேலம் அருகே கார் மோதி விவசாயி பலி டிரைவர் கைது
சின்னசேலம் அருகே கார் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 50), விவசாயி. இவர் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக ராயப்பனூர் வி.கூட்டு ரோட்டில் இருந்து நடந்தபடி சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் துரைசாமி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துரைசாமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான சென்னை திருநகரை சேர்ந்த குமார் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.