மின்சாரம் தாக்கி விவசாயி பலி

விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானாா்.

Update: 2023-05-10 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள காங்கேயனூரை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 48). விவசாயியான இவர், நேற்று காலை தனது நிலத்திற்கு சென்று, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சசிகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் காணை போலீசார் விரைந்து சென்று விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி அண்ணபூரணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்