ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த பெரியகொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் நடு பையன் மகன் மூப்பன் (வயது 52). விவசாயி. இவர் நேற்று தனது வயலுக்கு சென்றார். அப்போது, அங்கு இருந்த செல்போன் டவருக்கு மின்சாரம் செல்லும் இரும்பு கம்பத்தை அவர் தொட்டதாக தெரிகிறது. இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.