மோட்டார்சைக்கிள் விபத்தில் விவசாயி பலி

காவேரிப்பட்டணம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் விவசாயி இறந்தார்.

Update: 2022-06-16 17:12 GMT

காவேரிப்பட்டணம்:

காரிமங்கலம் தாலுகா கே.கரகூரை சேர்ந்த விவசாயி ராஜசேகர் (வயது 42). இவர், மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் பாலம் பகுதியில் சென்றார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்