பஸ்மீது மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி காயம்
பஸ்மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் விவசாயி காயம் அடைந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வேம்பி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45), ஆதி மூலம் மகன் அருண். விவசாயி. இவர்கள் இருவரும் கலவையில் இருந்து வேம்பிக்கு மோட்டார்சைக்களில் சென்று கொண்டிருந்தனர். கலவையை அடுத்த அருந்ததிபாளையம் அருகே சென்றபோது தனியார் பஸ் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் அருணுக்கு படுகாயம் ஏற்பட்டது.
அவரை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.