மொபட் மீது கார் மோதி விவசாயி படுகாயம்

மொபட் மீது கார் மோதி விவசாயி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-06-22 20:24 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40), விவசாயி. இவர் தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் இருந்து தனது வீட்டிற்கு மொபட்டில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது வெண்மான்கொண்டான் பிரிவு பாதையில் மொபட்டை திருப்பியபோது எதிரே வந்த கரூர் மாவட்டம் வடுகநாகம்பள்ளி கிராமத்தை சேர்ந்த மருடபதி என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட்டில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அன்பழகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்