காட்டெருமை தாக்கியதில் விவசாயி படுகாயம்

காட்டெருமை தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.

Update: 2023-04-17 18:48 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சபரிமலை. இவருக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மலையாண்டி பாறை அருகே விவசாய நிலம் உள்ளது. தன்னுடைய நிலத்தில் கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் வழக்கம் போல தன்னுடைய நிலத்தில் விவசாய பணிகளை செய்து வந்தார். அப்போது இவரது நிலத்தின் அருகே செல்லும் நீரோடையில் பதுங்கி இருந்த காட்டெருமை சபரிமலையை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்