விபத்தில் காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே விபத்தில் காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு

Update: 2022-06-28 12:43 GMT

கீழ்பென்னாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது53), விவசாயி.

இவர் சம்பவத்தன்று கருங்காலிகுப்பம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மகன், மகளை பார்த்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த கல் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் உபயதுல்லாகான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்