மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

தேவதானப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்.;

Update: 2023-10-11 22:15 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தை சேர்ந்தவர் மச்சேந்திரன் (வயது 54). விவசாயி. நேற்று முன்தினம் இவர், குள்ளப்புரத்தில் உள்ள மருதகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள தனது வாழைத்தோட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் வாழை இலைகளை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மரத்தின் இலைகள், அருகில் சென்ற மின்கம்பிகள் மீது பட்டன. இதனால் அந்த மரத்தின் மீது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத மச்சேந்திரன் அந்த மரத்தில் இலைகளை வெட்ட முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மச்சேந்திரன் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்