டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலி

Update: 2023-07-03 19:30 GMT

ராயக்கோட்டை:-

பாலக்கோடு தாலுகா ஏ.மல்லாபுரம் அருகே கடத்திகொல்லுமேடு பகுதியை சேர்ந்தவர் தேவன் (வயது 63). விவசாயி. இவர் மோட்டார்சைக்கிளில் ராயக்கோட்டை - உத்தனப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற டிராக்டர் திடீரென்று பிரேக் பிடித்து நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த தேவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவன் பரிதாபமாக நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்