மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விவசாயி சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விவசாயி உயிரிழப்பு.

Update: 2023-07-10 20:45 GMT

ஒரத்தநாடு:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா வடுவூர் வடபாதி வடக்கு தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பா (வயது61) விவசாயி. இவர் நேற்று நெய்வாசல் -அரசப்பட்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வளைவில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சின்னப்பாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சின்னப்பாவை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்