விக்கிரவாண்டி அருகேமொபட் மீது கார் மோதி விவசாயி சாவு

விக்கிரவாண்டி அருகே மொபட் மீது கார் மோதி விவசாயி உயிரிழந்தாா்.

Update: 2023-05-17 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 57). விவசாயி. இவர் நேற்று மதியம் லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே ,தனது மொபட்டில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக சென்ற கார், மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதி, சாலையில் கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் வந்த டிரைவர் முத்தாம்பாளையத்தை சேர்ந்த சிவ சக்திவேல் (46) உள்பட 4 பேர் காயமடைந்தனர். இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து பற்றி அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ரங்கநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறனர்.

Tags:    

மேலும் செய்திகள்