மொபட் மீது கார் மோதி விவசாயி பலி

கந்தம்பாளையம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார்.

Update: 2023-08-27 18:45 GMT

கந்தம்பாளையம்

விவசாயி பலி

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் காட்டுவளவை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 65). விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி வசந்தி (54). இவர்கள் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில் ரத்தினம் மாட்டுக்கு தீவனம் வாங்க தனது மொபட்டில் கந்தம்பாளையம் அடுத்த மணியனூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பொட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக ரத்தினம் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி வசந்தி நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

விசாரணை

இதன்பேரில் போலீசார் ரத்தினத்தில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்