விருத்தாசலத்தில் ரோடுரோலர் மோதி விவசாயி சாவு
விருத்தாசலத்தில் ரோடுரோலர் மோதி விவசாயி உயிரிழந்தார்.
விருத்தாசலம், ஏப்.6-
விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 65). விவசாயி. இவர் தனது மனைவி அமுதாவுடன்(56) மோட்டார் சைக்கிளில் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கு தரிசனம் முடித்து விட்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். மணலூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ரோலர் ஒன்று ராதாகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அமுதா, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.