லாரி மோதி விவசாயி சாவு

லாரி மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-01-21 19:25 GMT

குறிஞ்சிப்பாடி 

குள்ளஞ்சாவடி அருகே வழுதலம்பட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 55) விவசாயி. இவர் தனது சொந்த வேலை காரணமாக மொபட்டில் விருத்தாசலத்திற்கு சென்றார். பின்னர் அங்கு வேலை முடிந்ததும், அதே மொபட்டில் குறிஞ்சிப்பாடி புறவழிச்சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிங்கபுரி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அருகே சென்றபோது, கடலூரில் இருந்து வடலூர் நோக்கிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக சுந்தரமூர்த்தியின் மொபட்டில் மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்