லாரி மோதி விவசாயி சாவு

லாரி மோதி விவசாயி சாவு

Update: 2022-11-20 20:02 GMT

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள சுந்தரபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது58). விவசாயி. சம்பவத்தன்று இவர் சுந்தரபெருமாள் கோவிலில் இருந்து திருவலஞ்சுழிக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது தஞ்சையில் இருந்து அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ. செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விருதுநகர் மாவட்டம் அர்ச்சனாபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராஜபாண்டியன்(36) என்பவரை கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்