விவசாயி சாவு
கூடலூர் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கூடலூர் கரிமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சடசாமி (வயது 70). விவசாயி. இவர் கடந்த 11-ந்தேதி மாலை கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் ஒட்டிய கழுதை மேடு புலம் பகுதியில் உழவுப் பணிக்கு மாட்டுவண்டியில் சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கூடலூர் - குமுளி தேசிய நெடுஞ்சாலை தம்மனபட்டி பிரிவு அருகே வந்தபோது குமுளியில் இருந்து கம்பம் நோக்கி வந்த கேரளா மாநிலம் குமுளி 2-ம் மைல் பகுதியை சேர்ந்த அமீர் (34) மற்றும் அவரது தந்தை இஸ்மாயில் (70) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள், மாட்டு வண்டி மீது மோதியது. இதில் சடசாமி, அமீர், இஸ்மாயில் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சடசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.