மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை
முனைஞ்சிப்பட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் நாடார் தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மனநல பாதிப்பு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து துக்கத்துடன் காணப்பட்ட நாராயணன் நேற்று முன்தினம் வயலில் வாழைக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.