கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை

வாணியம்பாடி அருகே கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-18 17:19 GMT

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50), விவசாயி. இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கு இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமடைந்த செல்வம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்