அந்தியூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

அந்தியூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2022-06-20 21:26 GMT

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 58). விவசாயி. இவருடைய மனைவி தேவி (52). பிரகாசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு மகள், மகனை அழைத்துக்கொண்டு தேவி ஈரோட்டில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் தனிமையில் வசித்து வந்த பிரகாஷ் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்துகொள்வதற்காக விஷம் குடித்துவிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு டாக்டர்கள் சிகிச்ைச அளித்தும் பலன் இல்லாமல் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்