விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே காவனூர் சவரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 58). விவசாயி. இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாதபோது அங்கிருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த ராஜேந்திரனை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.