கோபி அருகே உள்ள கடுக்காம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 48). விவசாயி. இவருடைய மனைவி யுவராணி (39). ஜெகநாதன் உடல் நிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 16-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து விஷம் குடித்துவிட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ஜெகநாதன் இறந்துவிட்டார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.