விஷம் குடித்து விவசாயி தற்கொலை

போடி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-28 18:45 GMT

போடி அருகே உள்ள நாகலாபுரம் கெஞ்சம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருவையா (வயது 58). விவசாயி. இவா் வயிற்று வலியால் அவதியடைந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. நேற்று முன்தினம் குருவையா தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வலி தாங்க முடியாமல் அங்கிருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்ட குருவையா தம்பி பரமசிவம், அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்