திருக்கோவிலூர் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலைபோலீசார் விசாரணை

திருக்கோவிலூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-03-20 00:15 IST

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள காட்டுப்பயிர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மகன் சக்திவேல் (வயது 37), விவசாயி. இவருக்கு மனைவி, 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி கடந்த ஆண்டு சக்திவேலை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் சக்திவேல் மனமுடைந்து காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சக்திவேல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சக்திவேல் இறந்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேல் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்