விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தேனி அல்லிநகரத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-14 18:45 GMT

அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). விவசாயி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக விஜயகுமார் மனவருத்தத்துடன் இருப்பதாக மனைவியிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக விஜயகுமார் புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் தோட்டத்தில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்